6507 research outputs found
Sort by
பிராமிக் கல்வெட்டுக்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் வன்னிப் பிராந்தியத்தின் சமூக, பொருளாதார நிலைமைகள் - வவுனியா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
தென்னாசியாவிலே தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடாக
இலங்கை காணப்படுகின்றது. அவ்வகையில் வரலாற்றாசிரியர்களால் நீண்ட காலமாக
கவனத்தில் கொள்ளப்படாத பிராந்தியமாக வன்னிப் பிராந்தியம் காணப்படுகின்றது.
எனினும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல்
ஆய்வுகளின் பின்னனியில் இப் பிராந்தியம் வரலாற்றடிப்படையில் முக்கியம் பெறுகின்றது
என்பது உணரப்பட்டது. ஈழநாட்டில் பிரித்தானியர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு பல
நூற்றாண்டுகளாக நிலைபெற்ற குறுநில அரசுகள் வன்னியர்கள் என்ற சிற்றரசர்களாகும்.
பொதுவாக இவை இலங்கையின் வரட்சி வலயத்திலே அமைந்திருந்தன. அவ் வகையில்
வடமாகாணத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றாக வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது.
ஓர் நாட்டின் அல்லது ஒர் இனத்தின் ஆதிகால இடைக்கால வரலாற்றை அறிந்து
கொள்வதில் அக் காலங்களில் தோற்றம் பெற்ற மூலாதாரங்கள் முக்கியம் பெறுகின்றன.
அவற்றுள் சம்பவங்கள் இடம்பெற்ற காலத்தில் பொறிக்கப்பட்ட நம்பகத் தன்மையான
ஆதாரமாக பிராமிக் கல்வெட்டுக்கள் விளங்குகின்றன. பிராமி எழத்தின் தோற்ற
காலத்தையிட்டு பல கருத்துக்கள் காணப்பட்டாலும் தென்னாசியாவில் கி.மு 3ம்
நூற்றாண்டிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டமைக்கு சான்றாதாரங்கள்
காணப்படுகின்றன. இப் பிராமிக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில்
எழுதப்பட்டுள்ளதுடன் இவை ஒரிரு வரிகளில் பௌத்த துறவிகளுக்கு அல்லது பௌத்த
சங்கத்திற்கு அல்லது மதத்திற்கு சாதாரண மக்கள் தொடக்கம் அரச வம்சத்தவர் வரை
பலதரப்பட்ட பிரிவினரால் வழங்கப்பட்ட குகை, கற்படுக்கை, கல்லாசனம், கால்வாய்,
தானியம், குளம், காசு போன்ற தானங்கள் பற்றிய விபரங்களைத் தருகின்றன. இவை
கி.மு 3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 4,5ஆம் நூற்றாண்டு வரை
பயன்படுத்தப்பட்டிருப்பதனால் ஏறத்தாழ 700, 800 ஆண்டு கால இலங்கையின் புராதன
வரலாற்றை அறிய உதவுகின்ற நம்பகரமான ஆதாரங்களாகவுள்ளன. அவற்றுள் ஈழத்
திராவிட மக்களதும், அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களதும் வாழ்வியல்
நடவடிக்கைகளை அறிவதற்கும் பிராமிச் சாசனங்கள் முதன்மையான சான்றுகளாக
விளங்குகின்றன. அவ்வகையில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குள
கல்வெட்டுக்கள்(35) , எருபொத்தான கல்வெட்டுக்கள்(12) , மகாகச்சக் கொடி
கல்வெட்டுக்கள்(04), வெடுக்கினாரி மலைக் கல்வெட்டுக்கள்(03) போன்றன
வவுனியாவின் தெற்குப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இவை கி.மு 2800
வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் பேச்சு வழக்கினையும்,தமிழின்
செல்வாக்கினையும் கொண்டுள்ளதென பேராசிரியர் பரணவிதான கூறுகின்றார்.
அத்துடன் பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தமிழருக்கு எதிரான தகவல்களை
முறியடித்து இவர்கள் தமக்கென ஓர் இனம்,மதம்,மொழி, பண்பாடு, அரச உருவாக்கம்,
வணிகம் என்பவற்றோடு தனித்துவமாக இலங்கையின் பல பிரதேசங்களில் பரவலாக
வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றது. வுவனியாப் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
பிராமிக் கல்வெட்டுக்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் சமூக, பொரளாதார
விடயங்களை வெளிப்படுத்துவதே இவ் ஆய்வின் நோக்கம் ஆகும். வரலாற்று
அணுகுமுறையின் அடிப்படையில் விவரண ஆய்வாக அமையப்பெற்ற இவ்வாய்விற்கு
தேவையான தகவல்கள் முதல்நிலை தரவுகள், இரண்டாம் நிலைத் தரவுகள் என்ற
அடிப்படையில் பெறப்பட்டன. அவ்வகையில் களஅய்வுகள் முதல்நிலைத் தரவுகள் என்ற
வகையில் அடங்க குறித்த இவ்விடயம் தொடர்பாக வெளிவந்த நூல்கள், ஆய்வுக்
கட்டுரைகள், சஞ்சிகைகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவுள்ளன
ஜெயகாந்தன் சிறுகதைகளில் மனிதநேயம்: ஓர் ஆய்வு
தமிழில் புனைகதைகள் குறித்த சிந்தனையும் தேடலும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. ஆங்கிலேயர்
ஆட்சி காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் சமூக அமைப்பிலும்
மாற்றங்களை ஏற்படுத்தின. இம்மாற்றங்கள் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டன. மேலைநாட்டைப்
போலவே தமிழ் நாட்டிலும் முதலில் தோற்றம் பெற்றது நாவலாகும். அதன் பின்னரே சிறுகதைகள்
தோற்றம் பெற்றன. மேலைநாட்டு இலக்கியத் தாக்கத்தினால் தமிழில் அறிமுகமான சிறுகதையானது
வடிவம், அளவு, கருத்துச்செறிவு முதலான காரணங்களால் பெரும் செல்வாக்கைப் பெற்ற
கலைவடிவமாகத் திகழ்ந்தது. நீண்ட கதையோட்டம் இல்லாமல் ஒரு சிறு நிகழ்வை, மன உணர்வை,
மனிதப்பண்பை மையமாகக் கொண்டு படைக்கப்படும் சிறுகதைகள் மனித மனங்களை வெகுவாகக்
கவர்ந்தன. சிறுகதைக்கு மக்களிடம் ஏற்பட்ட செல்வாக்கு, எழுத்தாளர் பலரும் சிறுகதை படைப்பதற்கு
உந்துதலாக அமைந்தது. தமிழில் வ.வே.சு ஐயர் தொடங்கி வைத்த சிறுகதைப் பணியானது பலராலும்
தொடரப்பட்டது. எழுத்தின் ஆற்றல் மற்றும் கூர்மையை அணியாகக் கொண்டு படைக்கப்பட்ட
சிறுகதைகள் மக்களின் வாழ்க்கையை, வாழ்வியல் சூழல் மாற்றத்தை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்
ஊடகமாகச் செயற்பட்டன. சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள் தம் கருத்துக்களை முன்னெடுத்துச்
செல்லும் கருவிகளாக சிறுகதையைப் பயன்படுத்தினர். இதன் காரணமாக சிறுகதைத் துறைக்குள் பல
எழுத்தாளர்கள் நுழைந்தனர். அவர்களுள் ஜெயகாந்தன் முக்கியமானவர். ஜெயகாந்தன் 1950களில்
சிறுகதை எழுதத் தொடங்கி, அறுபதாண்டு காலமாக தனது எழுத்தின் வலிமையால் பல பரிசுகளை
வென்றவர். ஜெயகாந்தனின் சிறுகதைகள் சமுதாய மாற்றத்தை நோக்கிய கலைப்படைப்புக்கள் என்ற
வகையில் சமூகத்தின் தாழ்ந்த பக்கங்களை, சமுதாய முரண்பாடுகளை,சமுதாயப் புறக்கணிப்புகளுக்கு
உள்ளானவர்களை வெளிக்கொணரும் படைப்பிலக்கியங்களாக அமைகின்றன. அந்தவகையில்,
ஜெயகாந்தனின் சிறுகதைகளில் சுயநலம் நிறைந்து, பொதுநலம் குறைந்து காணப்படும் இக்கால
சமுதாயம் கரும்புள்ளியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மனிதநேயம் குறைந்து வருவதையும் தனிமனிதன்
தாழ்ந்து போவதையும் இவரது சிறுகதைகள் சுட்டிக்காட்டுகின்றன. மனிதநேயத்தின் மாண்பினை
உயர்த்துவதில், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகப் பொறுப்புணர்வு வேண்டும் என்பதை
வலியுறுத்துவதில் ஜெயகாந்தனின் வகிபங்கு யாது? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக்
கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயகாந்தனின் சிறுகதைகள் வலியுறுத்தும்
தனிமனித ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான அம்சங்கள் யாவை? மேலும், இதனை வெளிப்படுத்துவதற்கு
ஜெயகாந்தன் கையாண்டுள்ள உத்திகள் மற்றும் அவரது படைப்பாக்கத்திறன் போன்றவற்றை
வெளிக்கொணரும் நோக்குடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் சமூகவியல்,
மானிடவியல், மொழியியல் அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கான தகவல்
சேகரிப்பு முறையாக இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்,
படைப்பாளியின் சிறுகதைத் தொகுப்புகள், படைப்பாளி தொடர்பாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில்
வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், இணையப்பக்கங்கள் மற்றும் ஏனைய எழுத்தாளர்களின் விமர்சன
கட்டுரைகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை ஜெயகாந்தன் குறித்த ஆய்வுகளில் குறிப்பிட்ட
சில கதைக்கருக்களே பேசப்பட்டு வந்துள்ள நிலையில் அவரது சிறுகதைகளில் மனிதாபிமான
அம்சங்களின் வகிபாகம் குறித்த எவ்வித தனியான ஆய்வுகளும் வெளிவரவில்லை என்பதை
அடிப்படையாகக் கொண்டு சிறுகதைத்துறையில் பாரிய பங்காற்றிய ஜெயகாந்தனின் மனிதாபிமான
சிந்தனை குறித்து இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும். சமுதாயத்தில் மக்களின்
வாழ்க்கை சிறக்க வேண்டுமெனில் மனிதநேயம் ஓர் அடிப்படை விடயம் என்றவகையில்
மனிதநேயத்திற்கு தனது சிறுகதைகளில் ஓர் முக்கிய இடம் கொடுத்துள்ளார் ஜெயகாந்தன்
Violations of Islamic law in male–female relations: the shifting of nyubuk tradition of the customary peoples of Lampung
Advances in media and communication technology have wrought significant shifts in the nyubuk tradition of
the customary peoples of Lampung Pepadun. Male–female relations, once clearly regulated by customary
doctrine through nyubuk, are now mediated by social media technology that facilitates the violation of
customary and Islamic laws. This article examines how nyubuk, a cultural medium for communication that
has traditionally been used in spouse selection, has shifted as social media has become widely available.
More specifically, it seeks to understand how the nyubuk tradition has come to disappear without any
significant resistance. In doing so, it applies a qualitative descriptive approach, with data having been
collected through interviews. This study finds that despite generations of practice, shifting social and
cultural practices have threatened nyubuk with extinction, and the practice has increasingly been replaced by
social media. As a result, behaviors that violate social and religious norms have become increasingly
common in society. Male–female relations, traditionally regulated under Islamic norms through nyubuk,
have become increasingly open as cultural spaces have been replaced by social media. This has facilitated
transgressions and other violations of Islamic law by young men and women. Obeisance of religious law
depends significantly on local cultural authorities, and where these authorities are ignored, once dominant
laws and practices may become extinc
Impact of Grade 6 student’s choice of urban schools on the effectiveness of rural Schools (Research based on 1C and Type II schools of Alayadivembu Division)
மாணவர்களது நகர்ப்புறப் பாடசாலைகளின் தெரிவானது கிராமப்புறப் பாடசாலைகளின் விளைதிறனில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைவதனை ஆராய்ந்து முடிவுகளையும் உரிய விதப்புரைகளையும் முன்வைக்கும் நோக்கில் இவ் அளவை நிலை ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்புக் கோட்டத்திற்குட்பட்ட கிராமப்புறப் பாடசாலைகளினை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுவதனால் குறித்த பிரதேசத்திலுள்ள கிராமப்புறப் பாடசாலைகளிலிருந்து நோக்க மாதிரியினடிப்படையில் 1C வகைப் பாடசாலை ஒன்றும் வகை II பாடசாலை நான்கும் என 5பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. ஆய்வுக்கான சிறப்பு நோக்கங்களாக மாணவர்கள் கனிஷ்ட இடைநிலைக்கல்வியினைத் தொடர்வதற்கு நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்வதற்கான காரணங்களைக் கண்டறிதல், கிராமப்புறப் பாடசாலைகளிலுள்ள குறைபாடுகளினைக் கண்டறிதல், மாணவர்கள் நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்வதால் கிராமப்புறப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணுதல், கிராமப்புறத்தில் உள்ள பாடசாலைகளின் விளைதிறனை மேம்படுத்துவதற்குப் பொருத்தமான ஆலோசனைகளை முன்வைத்தல் போன்றன அமைகின்றன. அதிபர்கள் 5பேரும், ஆசிரியர்கள் 35பேரும், நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்யாத மாணவர்கள் 245பேரும் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்த மாணவர்கள் 96பேர் மற்றும் நகர்ப்புறப் பாடசாலைகளினைத் தெரிவு செய்த மாணவர்களது பெற்றோர்கள் 96பேரும் நோக்கமாதிரியினடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்மாதிரிகளிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல், ஆவணம் ஆகிய ஆய்வுக்கருவிகளின் மூலம் பெறப்பட்ட தரவுகள் அளவு மற்றும் பண்பு ரீதியாகவும் பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு Excel ஊடாக அட்டவணையின் மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. கிராமப்புறப் பாடசாலையிலுள்ள மாணவர்கள் ஆங்கில மொழிமூல கல்வியினைப் பெற்றுக் கொள்வற்காகவே நகர்ப்புறப் பாடசாலைகளைத் தெரிவுசெய்கின்றனர், கிராமப்புறப் பாடசாலைகளில் ஆங்கிலம் சார்ந்த வசதிகள் இல்லை, கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்களாகவே காணப்படுகின்றனர். போன்ற முடிவுகள் கண்டறியப்பட்டதுடன் கிராமப்புறப் பாடசாலைகளில் ஆங்கில மொழிமூலக்கல்வியினைக் கொண்டுவருவதற்கு பாடசாலை மற்றும் சமூகமும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும். பாடசாலையானது மாணவர்களுடன் சிறந்த உறவுகளினை வளர்த்துக்கொள்வதற்கான செயற்றிட்டங்களினை அதிபர் மேற்கொள்ள வேண்டும் போன்ற விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன
A Thematic Review on Digital Storytelling (DST) in Social Media
Digital Storytelling (DST) is defined as telling stories using digital means. It has been initially applied for diverse purposes, including in community development, therapeutic benefits, and as an aid in teaching and learning. DST has recently been broadly used on social media platforms for marketing, running campaigns, journalism, and much more. However, no comprehensive systematic or thematic review of DST in social media has been conducted. Accordingly, this paper aims to provide a thematic review of DST in social media. The thematic review was carried out on 50 articles published from 2016 to 2021. These 50 discrete studies were selected because they met the inclusion criteria based on the research question of this review. The thematic review used ATLAS.ti as a tool to assist the review process. The results indicated that DST in social media was appropriate for marketing, including branding and advertising. Besides, using DST in social media over the years for education, training, professional development, community development and services, running campaigns, and therapy has significantly impacted these areas. Across the research articles, including case studies and essays, authors have reported several benefits of using DST in social media. © 2022 Nova Southeastern University. All rights reserved
Perspective on Islamic women’s clothing among other religions: study based undergraduate students
Humans have different customs, cultures, and values depending on the
environment in which they live. Clothing is no exception. But Islamic women's
clothing is seen as one of the most talked-about topics in Sri Lanka in recent times,
facing many controversies worldwide. The main reason for this is the
misunderstandings that exist among people from other communities. This study,
therefore, examines the perspective on Islamic women’s clothing among non-Muslims, based at the University of Colombo, Sri Lanka, and presents how steps
can be taken to mitigate the misconceptions among them. The objectives of this
study are to explore the clarity that can be found among Muslim women regarding
the dress code that Islam imposes on women, to examine the perspective of other
religions on Islamic dress and if negative thoughts are found among other
religions, to find out the reason and make suggestions to mitigate them. This study
is a descriptive statistical study. Samples were selected through convenience
sampling at the Faculty of Arts, University of Colombo and to obtain the primary
data 100 Questionnaire was given to obtain through the online medium (Google
form). Secondary data such as books, research articles, dissertations, and the
Internet were also used to obtain additional data. 28% of those surveyed did not
have a proper understanding of Islamic women’s clothes. A further 11.9 %
believed women were being oppressed because of such clothing. Hence
organizing cultural events (Hijab Day) among students to discredit such
misunderstandings, women often care about their color when choosing their
clothes, and avoid black clothing, in cases where they are able to work with the
majority community especially during group activities, fully express their
personalities while remaining within the Islamic rules and resolving their doubts
by interacting beautifully with other communities are recommended in this study
ஆடை உற்பத்தியில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்: தர்கா நகரினை மையப்படுத்திய ஆய்வு
இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய பங்காற்றி வரும் ஒரு துறையாக ஆடைக் கைத்தொழில் காணப்படுகின்றது. இலங்கையின ஏற்றுமதி வருமானத்தில் முக்கிய பங்களிப்பு செய்து வரும் இத்துறையானது அதிகமானோருக்கு தொழில் வாய்ப்புகளையும் பெற்றுத்தருகின்றது. அந்தவகையில் இத்துறையில் அதிகமான பெண்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தொழிற்படும் இப்பெண் ஊழியர்கள் பல்வேறான சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனவே இத்துறையில் வேலை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் அவசியமாகும். இவ்வாய்வானது, தர்காநகர் பிரதேசத்தில் ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிதலினை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில் ரீதியான, உடல் ரீதியான மற்றும் சமூக ரீதியான சவால்கள் போன்றவற்றை அடையாளம் காண்பதனை துணை நோக்கங்களாக கொண்டு காணப்படுகின்றது. இவ்வாய்வுக்காக தர்கா நகர் பிரதேசத்தில் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மூன்று தொழிற்சாலைகளில் தொழில் புரியும் 241 பெண் ஊழியர்களில் யோமன் முறையை பயன்படுத்தி 150 பெண் தொழிலாளர்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் எழுமாற்று மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாய்வுக்கான முதலாம் நிலைத் தரவுகள் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தின் மூலமும் கலந்துரையாடல் மூலமும் பெறப்பட்டன. இத்தரவுகள் விவரண புள்ளிவிபரவியல் மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில் ரீதியான சவால்களில் குறைந்த ஊதியம் மற்றும் தொழில் நிமித்தமான போக்குவரத்து பிரச்சினைகளை அதிகமானவர்கள் எதிர்nகாள்கின்றனர். உடல் ரீதியான சவால்களில் உடற்சோர்வினை அதிகமாக எடுத்துக் கூறிய அதேவேளை நோய் வாய்ப்புகளுக்கு உள்ளாவதாகவும் குறித்த சிலர் எடுத்துரைத்துள்ளனர். அவற்றில் அதிகமானோர் தலைவலி மற்றும் மூட்டுவலி போன்ற நோய்களை அடையாளப்படுத்தியுள்ளனர். மேலும் சமூக ரீதியான சவால்களில் அதிகமான பெண்கள் தொழில் மற்றும் குடும்பத்தினை நடுநிலையாக பேண முடியாமை மற்றும் குழந்தை பராமரிப்பு தொடர்பான சவால்களை எதிர்நோக்குவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் ஊழிய நல சங்கங்கள் இவர்களது குறைந்தபட்ச ஊதியத்தினை அதிகரித்தல், நிறுவனமானது போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளல், மாதாந்த வைத்திய முகாம்களை ஒழுங்கமைத்தல், போதிய விடுமுறை அளிப்பு மற்றும் சிறந்த வேலைச் சூழலை அமைத்துக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் ஊழியர்கள் சிறப்பாக செயற்பட வழிவகுக்க முடியும் என பரிந்துரைக்கப்படுகின்றது
Archaeological surveys and their importance in respect of northern Sri Lanka
Archaeological studies, historical literature and archaeological heritage confirm that
Northern Sri Lanka has an ancient and continuous history of no less than 2,500 years. The
Pāli sources which recorded the history of Sri Lanka do not provide a balanced record of
the history of all the regions of Sri Lanka in an equal manner. However, Northern Sri
Lanka has been mentioned as “Nāgadīpa (m)” since the ancient time and as “Nāgadīpam”
and afterwards as “Uttara - desa” since the 7th Century A.D. Archaeological and literary
sources state that Northern Sri Lanka was uniquely denoted as “Nāgadīpa(m)” and
afterwards as “Uttara - desa” even before the common era i.e. B.C. Confirming this
further, a gold plate inscription belonging to the 3rd – 4th centuries, found at Vallipuram
in 1936, speaks of a Buddhist Vihara found at “Nakātiva” and confirms that the pāli
literature was identified as the Nāgadīpa (m) of Northern Sri Lanka. Thus, Northern Sri
Lanka referred as “Nāgadīpa (m)” in Pāli and “Nāgativa” in Prakrit was identified as
“Nākapūmi” and “Nāganātu” which is proved by the archaeological sources and
literatures of īḻam and Tamil Nāṭu. These sources show that names such as Nāgadīpa (m),
Nākapūmi, and Nāganātu were used to identify Northern Sri Lanka until 13th century.
Accordingly, this study reveals the importance of archaeological studies carried out in
Northern Sri Lanka (Nāgadīpa (m)), a region with its unique traditional history since
ancient times in the history of Sri Lanka. Therefore, the hypotheses of this study stresses
on the importance of archaeological excavations carried out so far in Northern Sri Lanka
in understanding the history of Sri Lanka and whether major archaeological studies in
Northern Sri Lanka have reread the history of Sri Lanka. The primary objective of the
research that is based on the afore mentioned hypothesis, is to study the importance of the
archeological excavations carried out here so far in revealing the ancient history of
Northern Sri Lanka or in allowing the history of Northern Sri Lanka to be redefined. It
further focuses in identifying the role of Northern Sri Lanka in the history of
archaeological research of Sri Lanka. In order to fulfill these research objectives, the study
has taken the research reports, articles and books published based on the archaeological
research conducted in the said area as the primary sources, while data collected through
observation of the archaeological sites and archaeological evidences are treated as as
secondary data, and thereby the primary and secondary data has been considered in the
analysis
உளவளத்துணை நோக்கில் இத்தா - இஸ்லாமிய மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது
மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதற்கு ஒரு பதிலாக இறைவனால் படைக்கப்பட்ட மிக மேலான படைப்பு என்ற கருத்து உண்டு. இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் உலக வாழ்வில் பல்வகையான இன்னல்கள், சவால்கள், கஷ்டங்கள், அடக்குமுறைகள், தீமைகள் போன்றவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளான். பெரும்பாலான மனிதர்கள் இதற்கு முகம் கொடுத்து வாழத் தெரியாது நிம்மதியின்றி வாழ்வை இழக்கின்றனர். இத்தகைய மனிதர்களை வளப்படுத்தி வாழச்செய்யும் ஒரு சேவையாக உளவளத்துணை காணப்படுகின்றது. உளவளத்துணை என்பது நாளாந்த வாழ்வில் மனிதன் முகம்கொடுக்கும் எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்று சாதாரண நிலைக்கு கொண்டு வரும் செயற்பாடாகும். இதற்கமைய ஒரு தனியாள் முகம்கொடுக்கும் மனவெழுச்சிப் பிரச்சினைகள் பல. அதில் ஒன்றுதான் இழவிரக்கம். பிறப்பும் இறப்பும் உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்றாகும் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமாக இருப்பினும் நம்மை விட்டு பிரிந்து செல்லும் அன்புக்குரிய உறவுகளின் இறப்பினை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அந்தவகையில் இழவிரக்கம் எனப்படுவது பெரும்பாலும் இழப்பினை தொடர்ந்து அதிலும் அன்புக்குரியவரின் மரணத்தை தொடர்ந்து ஏற்படும் தாக்கமாகும். மரணத்துயரில் உள்ளவரின் பிரச்சினையை இனங்கண்டு அதற்கான மரணச்சடங்கு கிரிகைகளை பின்பற்றுவதன் மூலம் அத்துயரிற்கான தீர்வினைப் பெற முடியும். இவ்வாறான துக்கம் அனுஷ்டிப்பு அல்லது மரணசடங்கு என்பதற்கமைய, இஸ்லாமிய மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் 'இத்தா' என்ற சடங்கு முறையை பின்பற்றுகின்றனர். இத்தா எனப்படுவது ஒரு பெண் கணவனின் மரணம் அல்லது பிரிவை தொடர்ந்து மறுமணம் செய்யாமல் சில காலங்கள் காத்திருப்பதாகும். இந்த 'இத்தா' முறைமையானது உளவளத்துணையில் இழவிரக்கத்தோடு தொடர்புபட்டிருப்பதை காணமுடிகிறது. அந்தவகையில் 'இத்தா' முறையானது இழவிரக்கத்தின் உளவளத்துணை செயற்பாட்டோடு எத்தகைய தொடர்பை கொண்டிருக்கிறது. இவை இரண்டும் ஒரே பயனை தருகிறதா? என்பது ஆய்வு பிரச்சினையாக அமைந்தது. இவ்விரு கருத்தாக்கங்களும் சடங்கு முறைகளும் அடிப்படையில் ஒத்த தன்மையை அல்லது ஒத்த பயனையே தருகிறது என்ற அதன் ஒரே தன்மையான நோக்கங்கள் இதுவரை ஆராயப்படவில்லை எனும் ஆய்வு இடைவெளியை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இழவிரகத்திற்காக மேற்கொள்ளப்படும் சடங்குகள் மற்றும் கிரிகைகள் மனிதர்களை சுயமாக ஆற்றுப்படுத்துகிறது. அதேபோல இத்தா சடங்கு முறையும் பெண்களை சுயமாக ஆற்றுப்படுத்துகிறது என்பதன் தொடர்பை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வில் ஒப்பீட்டு ஆய்வு, விபரண ஆய்வு பகுப்பாய்வு முறை என்பன பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் இவ் இத்தா முறைமை, தனியாளை ஆற்றுப்படுத்துகிறது என்பதை ஆழமாகப் பதியச் செய்கின்றது
இளங்குற்ற நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் சமூக குடித்தொகை, தனிநபர் சார்ந்த காரணிகளும் விளைவுகளும்: அச்சுவேலி சான்றுபெற்ற பாடசாலையை அடிப்படையாக கொண்ட ஓர் சமூகவியல் ஆய்வு
மாறிவருகின்ற சமூக சூழலில் இளங்குற்ற நடத்தை முக்கிய சமூக பிரச்சினையாக
அமைந்துள்ளது. 18 வயதிற்குற்பட்ட சிறுவர்களால் சமூகத்தினுடைய விழுமியங்களுக்கும்,
சமூகத்தினுடைய கூறுகளின் செயற்பாட்டிற்கும் பாதிப்புகள் ஏற்படுத்தப்படும் போது
இச்சிறுவர்களின் நடத்தை இளங்குற்ற நடத்தையாக அடையாளப்படுத்தப்படுகின்றது
(Unicef,2019). இளங்குற்றவாளியாக சிறுவர்கள் நிலைமாற்றமடைவதனை தவிர்ப்பதற்கான
நடவடிக்கைகள் குடும்ப கட்டமைப்பு தொடக்கம் அரசாங்கம் வரையிலான நிறுவன ரீதியான
செயற்பாடுகளும் அவசியமாகின்றது. இலங்கையில் காணப்படும் ஒரேயோரு தமிழ் மொழிமூல
சான்று பெற்ற பாடசாலையான அச்சுவேலி சான்று பெற்ற பாடசாலை சிறுவர்களின் நன்நடத்தை
பாடசாலையாகவும் மீள்சமூகமயமாக்கலுக்கான தளத்திளை உருவாக்குவதாகவும்
காணப்படுகின்றது.அந்த வகையில் அச்சுவெலி சான்று பெற்ற பாடசாலையில்
மீள்சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களின் குற்ற நடத்தைக்கான
சமூககுடித்தொகை காரணிகளும், விளைவுகளும் எனும் இவ்வாய்வானது கணியம் மற்றும்
பண்புசார் ஆய்வு நுட்ப முறைகள் சேர்ந்த கலப்பு முறை ஆய்வாக அமைந்துள்ளது.
கணியம்சார் தரவுகள் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து மூலமாகவும் பண்புசார் தரவுகள்
விடய ஆய்வு, ஆழமான நேர்காணல், நேரடி அவதானம் ஆகியவற்றுடன் நூல்கள்,
சஞ்சிகைகள், அரசாங்க அறிக்கைகள், இணைய கோப்புகள் மூலமாக இரண்டாம்நிலை
தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட கணியம் சார் தரவுகள் சமூக விஞ்ஞான
ஆய்வுகளுக்கான தரவு மென்பொதி (SPSS) ஊடகாகவும் பண்புசார் தரவுகள் கருப்பொருள்
பகுப்பாய்வு மூலமாகவும் பகுப்பாய்வு மேற்க்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவுகள்
பெறப்பட்டுள்ளன.இளங்குற்ற நடத்தைக்கான முக்கிய காரணிகளாக குடும்பங்களில்
சிறுவர்களுக்கு கிடைக்கும் அன்பு மற்றும் கரிசணை, சிறுவர்களினுடைய நண்பர்களினால்
தவறாக வழிநடத்தப்படல் மற்றும் குற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அழுத்தம்,
ஊடகங்களினால் கவரப்படல் மற்றும் சமூக ரீதியாக எல்லைப்படுத்தல் போன்றவை இளங்குற்ற
நடத்தைக்கான பிரதான காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் இளங்குற்ற
நடத்தையினால் ஏற்படும் விளைவுகள் எனும் போது போதைப்பொருள் பாவணை, குடும்பம்
மற்றும் சமூகத்திலிருந்து எல்லைப்படுத்தப்படல், குற்றநடத்தைகளில் இருந்து
வெளிவருவதற்கான கடினத்தன்மை மற்றும் முயற்சியின்மை போன்றவற்றுடன்
மீள்சமூகமயமாக்கலின் மூலமாக தாங்களும் சமுதாயத்தில் முன்மாதிரியான பிரஜையாக வர
வேண்டும் போன்ற உள மாற்றங்களும் பிரதான விளைவுகளாக இனங்காணப்பட்டுள்ளன.
சிறுவர்கள் சமூகத்தின் நாளைய பிரஜைகள் சிறுவர்களின் வாழ்க்கை அனுபவங்கள்
பெறுமதிமிக்கவை. இளங்குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் சிறுவர்களை தொடர்ந்தும்
குற்றவாளிகள் என முத்திரைக்குத்தாமல் அவர்களையும் சமூகத்தினுடைய எதிர்க்காலத்திற்கான
சிறந்த உறுப்பினராக செயற்படுவதற்கான வாய்ப்பினையும் சூழலையும் உருவாக்க அரசாங்கம்
தொடக்கம் தனிநபர் வரையிலும் சமூகத்தின் அனைத்து கூறுகளினுடைய பங்களிப்பும் அவசியமானதாக அமைந்துள்ளது. இவ்வாறான விடயங்களை முன்னிலைப்படுத்திய வகையில்
ஆய்வானது இளங்குற்ற நடத்தைகளில் செல்வாக்குச் செலுத்தும் சமூக குடித்தொகை, தனிநபர்
சார்ந்த காரணிகளும் விளைவுகளை இனங்காண்பதுடன் எதிர்கால ஆய்வுகளுக்கான
முன்னேடியாகவும் அமைந்துள்ளத